×

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டை: கட்டணமின்றி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவையான 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது காமில் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முஹம்மது கலீபா காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் ஆகியோரிடம் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது. 2023 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதல்வர் மு.க ஸ்டாலின், கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டை: கட்டணமின்றி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagur Targa Kanduri Sandalwood Festival ,BC ,Stalin ,Nagore Targa Kanturi Sandalwood Festival ,Dinakaraan ,
× RELATED போக நந்தீஸ்வரர் ஆலயம்