×

வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோயிலிலிருந்து, கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, நாராயண பெருமாள் கோயிலுக்கு வஸ்திர மரியாதை

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் அருள்மிகு வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி திருக்கோயிலிலிருந்து பரிவட்ட மரியாதை,  மாலை ஆகியவை கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, அருள்மிகு செல்வ நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில், “இதர மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழகத் திருக்கோயில்களிலிருந்து இதர மாநிலத் திருக்கோயில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே, சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலிருந்து ஆந்திர பிரதேசம், ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் அருள்மிகு வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி திருக்கோயிலிலிருந்து பரிவட்ட மரியாதை  மாலை ஆகியவை கர்நாடக மாநிலம் மேல்கோட்டை,  அருள்மிகு செல்வ நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது, இதனால் இதர மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கும் இடையே நல்லிணக்க உறவு மேம்படும். இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்இரா.கண்ணன், இணை ஆணையர்கள் பொ.ஜெயராமன், இரா.வான்மதி, திருப்பெரும்புதூர், எம்பார் சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் P.முத்துலட்சுமி, திருக்கோயில் தக்கார்/ஆய்வர் ஜெ. சுரேஷ் குமார், அருள்மிகு செல்வ நாராயண பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் மகேஷ் மற்றும் திருக்கோயில் மணியம் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோயிலிலிருந்து, கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, நாராயண பெருமாள் கோயிலுக்கு வஸ்திர மரியாதை appeared first on Dinakaran.

Tags : Vaikunda ,Perumal Embar Swami Temple ,Karnataka State ,Malkot ,Narayana ,Perumal ,Temple ,Kanchipuram ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin ,Hindu Religious Foundation ,Minister ,Sekarbabu ,Kanchipuram District Sripurudur Circle ,Vaigunta Perumal Embar Swami Temple ,Karnataka ,Narayana Perumal Temple ,
× RELATED கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே...