×

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 980 தரிசுநில தொகுப்புகளில், 453 இடங்களில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்திட்டத்தில் உருவாக்கப்படும் ஆழ்துளை அல்லது குழாய் அல்லது திறந்த வெளிக் கிணறுகளில் தட்கல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 2,000 மின் இணைப்பு வழங்கப்படும். இத்தகைய மின் இணைப்பு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் பதவியின் பெயரில் மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு தட்கல் முறையில் வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு ஆகும் மொத்த செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. தட்கல் முறையில் வழங்கப்படும் இந்த மின்இணைப்புகளில் மின் அளவீட்டுக்கருவி பொருத்தப்பட்டு, அதற்கான மின்நுகர்வுக் கட்டணத் தொகையையும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைத் திட்டத்தின் கீழ், அரசே செலுத்தும். 2022-23ம் ஆண்டில் 3,204 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. www.tnagrisnet.tn.gov.in, www.tnhorticulture.tn.gov.in, www.mis.aed.tn.gov.in இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்து, கொள்ளலாம்….

The post வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Agriculture and Farmers' ,Welfare ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்