×

ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் 13 ரவுடிகள் ஆஜர்: விசாரணை 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் நேற்று 13 ரவுடிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸ், சிபிசிஐடி, சிபிஐ விசாரித்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், 1400க்கும் அதிகமான நபர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் சந்தேகத்துக்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில், 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரவுடிகள் திண்டுக்கல்லை சேர்ந்த மோகன் ராம், திருச்சி சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ், திலிப் (எ) லட்சுமி நாராயணன், தென்கோவன் (எ) சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் மற்றும் கடலூர் மத்திய சிறையில் உள்ள செந்தில் (எ) லெப்ட் செந்தில் ஆகிய 13 பேருக்கும் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 13 பேரும் நேற்று காலை தங்களது வக்கீல்களுடன் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகினர். அப்போது 13 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். …

The post ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் 13 ரவுடிகள் ஆஜர்: விசாரணை 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Ramajayam ,Trichy Court ,Trichy ,Dinakaran ,
× RELATED பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில்...