×

சென்னை மாநகராட்சியின் பருவ மழை கட்டுப்பாட்டு அறையில் கே.என்.நேரு ஆய்வு; ஊழியர்கள் முழு கண்காணிப்புடன் பணியாற்ற அறிவுரை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்  சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், இணை ஆணையர்கள் சங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் பிரசாந்த், விஷூ மஹாஜன், சினேகா, சிவகுரு  பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமை பொறியாளர் ராஜேந்திரன்,  மண்டலக் குழு தலைவர்கள் ஸ்ரீ ராமுலு, சரிதா மகேஷ்குமார் உள்பட பலர்  உடனிருந்தனர். இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் மழைநீர் கண்காணிக்கப்படுவதையும், மாநகராட்சியின் 1913 உதவி எண்ணில் புகார்கள் பெறப்படுவதையும், புகார்களை தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையும், 1913 உதவி எண்ணில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற தொலைபேசி அழைப்பினை அமைச்சர் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், தொடர்புடைய இடத்தில் அலுவலர்களை உடனடியாக அனுப்பி மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து, ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மழைநீர் வடிகால் பகுதியில் மழைநீர் வெளியேறுவதையும், வார்டு-57 வால்டாக்ஸ் சாலையில் மழைநீர் பக்கிங்காம் கால்வாயில் இணையும் இடத்தில் வெளியேறுவதையும், பாரிமுனை பிரகாசம் சாலை, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-77 புளியந்தோப்பு பிரதான சாலை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-64க்குட்பட்ட கொளத்தூர் 70 அடி சாலை ஆகிய இடங்களில் மாநகராட்சியின் சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, திரு.வி.நகர் மண்டலம், ராயபுரம் மண்டலம் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினர்.  அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் முழு கண்காணிப்புடன் பணியாற்றிட வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். …

The post சென்னை மாநகராட்சியின் பருவ மழை கட்டுப்பாட்டு அறையில் கே.என்.நேரு ஆய்வு; ஊழியர்கள் முழு கண்காணிப்புடன் பணியாற்ற அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Seasonal Rain Control Room ,Chennai Corporation N.N. ,Nehru ,Chennai ,Ribbon Building ,Chennai Corporation ,Chennai Municipal Corporation N.N. Nehru ,
× RELATED இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்...