×

திட்டக்குடி அருகே காட்டு பன்றிகளால் மக்காச் சோளம் நாசம்-விவசாயிகள் வேதனை

திட்டக்குடி : திட்டக்குடியை அடுத்துள்ள கோழியூர், வசிஷ்டபுரம், பெருமுளை, சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம், நெடுங்குளம், புலிவலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது திடீரென காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக  வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய  விளை நிலத்துக்கு  படையெடுத்து அறுவடைக்கு  தயாராக இருக்கும்  மக்காச்சோளத்தை ஒடித்து கருத்துகளை தின்று நாசம் செய்து வருகின்றன. விவசாயிகள் காட்டுப் பன்றிகளை விரட்டினாலும் பன்றிகள் கூட்டமாக மனிதர்களை தாக்க முயல்கின்றன. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 5 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்துள்ளேன். அந்த பயிரை முற்றிலும் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து விட்டது. நாங்கள் பயிர் சாகுபடி செய்வதற்கு விதை, உரம், ஏர் ஓட்டியது, களை எடுக்கும் ஆட்கள் கூலி என ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறோம். இந்தத் தொகையை எப்படி நாங்கள் விவசாயத்தில் இருந்து எடுக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்து கடைசியில் ஒன்றும் மிஞ்சவில்லை, என்றார். அதிகாரிகள் ஆய்வு செய்து, காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாய விளைநிலத்தில் உள்ள பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திட்டக்குடி அருகே காட்டு பன்றிகளால் மக்காச் சோளம் நாசம்-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Kozhiyur ,Vasishtapuram ,Perumulai ,Sirumulai ,Vaiyangudi ,Satthanantham ,Nedungulam ,Pulivalam ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு