×

தஞ்சாவூரில் கஞ்சா போதையில் பழவண்டியை சூறையாடிய அரவாணிகள்-அச்சத்தில் சிறு, குறு, வியாபாரிகள்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் 20 ஆண்டுகளாக பழ வியாபாரம் செய்து வருவார் ராமு என்கின்ற முண்டாசுராமன் (55). இவர் தஞ்சாவூர் காவிரி சிறப்பு அங்காடி எதிரே கடந்த 17 வருடங்களாக தள்ளுவண்டியில் பழவியபாரம் செய்து வருகிறார்.தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி வேலை ஆரம்பித்த பின் அங்கு உள்ள அனைத்து கடைகளையும் காலி செய்ய ஆணையர் உத்தரவிட்டிருந்தார், அதன் பின் அங்கு தள்ளு வண்டியில் வியாபாரம் செய்த அனைவரும் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவில் போட்டு பழவியாபாரம் செய்து வருகிறார் இந் நிலையில் கஞ்சா போதையில் வந்த இரண்டு அரவாணிகள் பழ வியாபாரி ராமுவிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டு அவர் கடையில் உள்ள பழங்களை அள்ளி சாலையில் வீசி பழகூடைகளையும் சாலையில் போட்டு உடைத்து பழ வண்டியை சாய்த்து கடையை சூறையாடி உள்ளனர். அதை கண்ட மற்ற வியாபாரிகள் ரகளையில் ஈடுப்பட்ட அரவாணிகளை தடுத்துள்ளனர். யாருக்கும் அடங்காத கஞ்சா போதை அரவாணிகள் நகரம் முழுவதும் தினம்தோறும் இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவதால் சிறு, குறு, வியாபாரிகள் தினம்தோறும் பெரும் அச்சத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுப்படும் அரவாணிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்….

The post தஞ்சாவூரில் கஞ்சா போதையில் பழவண்டியை சூறையாடிய அரவாணிகள்-அச்சத்தில் சிறு, குறு, வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Aravanis ,Ramu Mundasuraman ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...