×

ஓட்டல் அறை வீடியோ, கோஹ்லி கடுப்பு

பெர்த்: தனது ஓட்டல் அறையில் அத்துமீறி நுழைந்து வீடீயோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டதை ஏற்க முடியாது என்று கோஹ்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  உலக கோப்பையில் விளையாடி வரும் கோஹ்லி,   சமீபத்திய போட்டிக்காக  பெர்த் நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். கோஹ்லி இல்லாதபோது, அவரது அறையை முழுவதுமாக வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், அது குறித்து கோஹ்லி பதிந்த தகவல் விவரம்: ரசிகர்கள் தங்கள் அபிமான வீரர்களை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களை  சந்திப்பதில் ஆர்வமாகவும் இருப்பார்கள். அதை நான் புரிந்துகொள்வதுடன் பாராட்டவும் செய்வேன்.  ஆனால், என் அறை வீடியோவை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இப்படி எனது தனியுரிமையில் தலையிடுவது கவலை அளிக்கிறது. எனது சொந்த  அறையில் தனிமையை பாதுகாக்க முடியவில்லை என்றால், நான் வேறு எங்கு தனிமையை எதிர்பார்க்க முடியும். இதை ஏற்கவே முடியாது.  தயவு செய்து மற்றவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறேன். எங்களை  பொழுதுபோக்கு பொருளாகக் கருத வேண்டாம். இவ்வாறு கோஹ்லி பதிவிட்டுள்ளார்….

The post ஓட்டல் அறை வீடியோ, கோஹ்லி கடுப்பு appeared first on Dinakaran.

Tags : Kohli ,Perth ,
× RELATED உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை...