×

தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததால் 8 சிறுத்தைகளும் வனத்துக்குள் செல்கிறது: உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு

போபால்: குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட 8 சீட்டா சிறுத்தைகளும் இம்மாதம் வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் இனத்தை சேர்ந்த எட்டு ‘சீட்டா’ வகை சிறுத்தைகளை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 17ம் தேதி மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். 30 முதல் 66 மாத வயதுக்குட்பட்ட ஐந்து  பெண் சிறுத்தைகளும், மூன்று ஆண் சிறுத்தைகளும் உள்ளன. அவற்றிற்கு ஃப்ரெடி, ஆல்டன், சவன்னா, சாஷா, ஓபன்,  ஆஷா, சிபிலி மற்றும் சைசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு எருமை  இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. சர்வதேச விதிமுறைகளின்படி வன விலங்குகளை வேறு நாட்டில் இருந்து இடம் பெயர்வு செய்வதற்கு முன்னும் பின்னும் அவற்றை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். ஏதேனும் அவற்றுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுக்க இம்முறை கையாளப்படுகிறது. தற்போது ஆறு ‘போமா’க்கள் எனப்படும் குறுகிய பகுதியில் 8 சீட்டாக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், 8 சீட்டா சிறுத்தைகளையும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து ஐந்து சதுர கிமீ பரப்பளவில் உள்ள பரந்த வனப்பகுதியில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான உயர்மட்ட வனவிலங்குகள் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் குழுவினர் கூறகையில், ‘8 சிறுத்தைகளும் இம்மாதம் தனிமைப்படுத்த மையத்தில் இருந்து பரந்த வனப்பகுதியில் விடப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை’ என்று கூறினர்….

The post தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததால் 8 சிறுத்தைகளும் வனத்துக்குள் செல்கிறது: உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Kuno National Park ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...