×

ஆர்எஸ்எஸ் தொண்டராக ஆளுநர் அண்ணாமலைக்கு விளம்பர மேனியா: தொல்.திருமாவளவன் பேட்டி

கடலூர்: கடலூரில் திருமாவளவன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆளுநரே ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார், ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகிறார். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பாஜவினர் இதுபோன்று பேசி வருகின்றனர். இதற்காக பாஜகவை கடுமையாக விசிக கண்டிக்கிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்னும் நோய் உள்ளது. தனிநபர் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரீகமானது. ‌அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். இந்தியை மத்திய அரசு திணிக்கிறது. ஆங்கிலத்தை யார் திணிப்பது? பாஜ சொல்வது வேடிக்கையாக உள்ளது. இந்தி திணிப்பு என்பது மட்டுமே ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றி விட்டனர். 70 சதவீதம் மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர். அதிகம் இந்தி உள்ள மாநிலங்களில் இம்முடிவு எடுக்கலாம். மற்ற மாநிலங்களில் இதை திணிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்….

The post ஆர்எஸ்எஸ் தொண்டராக ஆளுநர் அண்ணாமலைக்கு விளம்பர மேனியா: தொல்.திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor Annamalai ,RSS ,Thol ,Thirumavalavan ,Cuddalore ,BJP ,Coimbatore ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம்...