×

எல்லை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.2,180 கோடியில் கட்டிய 75 சாலை, பாலங்கள் திறப்பு

புதுடெல்லி: கிழக்கு லடாக், காஷ்மீர், அருணாச்சல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.2,180 கோடியில் கட்டப்பட்ட 75 சாலைகள், பாலங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். காஷ்மீர், லடாக், அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சல், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ரூ.2,180 கோடி செலவில் கட்டப்பட்ட 75 பாலங்கள், சாலைகள் திறப்பு விழா, கிழக்கு லடாக்கின் தவுலத் பெக் ஓல்டியில் நேற்று நடந்தது. இத்திட்டப் பணிகளை எல்லைப்புற சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) மேற்கொண்டுள்ளது. விழாவில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று 75 உள்கட்டமைப்புகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில், 20 திட்டங்கள் காஷ்மீரிலும், 18 லடாக் மற்றும் அருணாச்சலிலும், 5 உத்தரகாண்டிலும், 14 திட்டங்கள் சிக்கிம், இமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தானிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த 75 திட்டங்களில் 45 பாலங்களும், 27 சாலைகளும், 2 ஹெலிபேட்களும் கட்டப்பட்டுள்ளன. இவற்றை திறந்து வைத்த அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த, தொலைதூரப் பகுதிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் ஜம்மு காஷ்மீரில் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படாதது, தீவிரவாதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த 75 பாலங்கள், சாலைகள் மூலமாக நாட்டின் மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள எல்லையோர பகுதிகளில் இருந்து ராணுவம் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து எளிதாகும். எல்லையோர பகுதிகள் அனைத்து விரைவில் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும்,’ என்றார்….

The post எல்லை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.2,180 கோடியில் கட்டிய 75 சாலை, பாலங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,East Ladakh ,Kashmir ,Arunachal ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு