×

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி கோழி, தீவனங்கள் கொண்டு வர தடை-மாநில எல்லைகளில் சோதனை தீவிரம்

ஊட்டி : கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்திற்கு கோழி மற்றும் தீவனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டம் உட்பட சில பகுதிகளில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வாத்துக்கள் மற்றும் கோழிகள் இறந்த நிலையில் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் பறவை காய்ச்சல் உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட கோழிகள் மற்றும் வாத்துக்களை எரித்தும், புதைத்தும் வருகின்றனர்.  இந்நிலையில், அண்டை மாநிலமான நீலகிரி மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம், அங்கிருந்து கோழிகள் மற்றும் கால்நடை தீவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால், எளிதில் மாநில எல்லை கிராமங்களில் வளர்க்கப்படுகள் பறவைகளுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பராவமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழக – கேரள மாநில எல்லைகளான நாடுகாணி, தாளூர், சோலாடி உட்பட 8 சோதனை சாவடிகளிலும் கால்நடை மருத்தவர்கள் தலைமையிலான குழுவினர் கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும், கேரள மாநிலத்தில் இருந்து கோழி, வாத்துக்கள், முட்டை மற்றும் கோழி தீவனங்கள் உட்பட அனைத்தும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் வாகனங்கள் வர அனுமதிக்கப்படுகிறது.  கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நீலவண்ணன் கூறியதாவது:கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநில எல்லையான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழி மற்றும் வாத்து போன்ற பறவைகளுக்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, மாநில எல்லையான நாடுகாணி, தாளூர், சோலாடி உட்பட தமிழக-கேரள எல்லையில் உள்ள 8 சோதனை சாவடிகளிலும் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.  கேரள மாநிலத்தில் இருந்து கோழி, வாத்துக்கள், முட்டைகள் மற்றும் கோழித் தீவனங்கள் ஆகியவை கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதுவரை மாநில எல்லைகளில் உள்ள கிராமங்களில் பறவை காய்ச்சல் ஏதும் ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.கேரள வாகனங்கள் சோதனைக்கு பிறகு அனுமதிகலெக்டர் அம்ரித் கூறுகையில்,“கேரளாவில்  பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் நீலகிரி மாவட்ட எல்லைகளில் பல்வேறு  முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக மாவட்டத்தில் 8 சோதனை சாவடி அமைக்கப்பட்டு  அதில் 3 பேர் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய  அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள்  அனுமதிக்கிப்படுகிறது. வட கிழக்கு பருவ மழையின் போது குன்னூர்  மற்றும் கோத்தகிரி பகுதிகள் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 283 நிலச்சரிவு அபாயகர பகுதியாக  கண்டறியப்பட்டது. 456 தங்கும் முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. பேரிடர்  நேரத்தில் முதல் தகவல் அளிக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கனரக  இயந்திரங்களான பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாராகவும்  உள்ளது. பேரிடர் காலங்களில் எந்த நேரத்திலும் பணியாற்ற மாவட்ட நிர்வாகம்  தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்புகேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பந்தலூர் அருகே  கேரளா எல்லைப்பகுதியில் உள்ள நாடுகாணி, சேரம்பாடி சோலாடி, தாளூர் உள்ளிட்ட  சோதனைச்சாவடிகளில் கூடலூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர்  நீலவண்ணன், மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் தலைமையில் கால்நடை மருத்துவர்கள்  மற்றும் உதவியாளர்கள் கேரளாவில் இருந்து வரும் கோழி, வாத்து மற்றும்  முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி பிற வாகனங்களுக்கு  கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து  எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி  நடைபெறும் என தெரிவித்தனர்….

The post கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி கோழி, தீவனங்கள் கொண்டு வர தடை-மாநில எல்லைகளில் சோதனை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED மழையால் பசுமைக்கு மாறிய காடுகள்...