×

48 நாள் தைலக்காப்பு நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் திருவடி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும், 108 வைணத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழா நடப்பதால் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் பெருமாள் 48 நாட்கள் தைலக்காப்பில் இருப்பது வழக்கம்.இந்நிலையில் நேற்று தைலக்காப்பு முடிந்த நிலையில் தலை முதல் பாதம் வரையிலான மூலஸ்தான பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுகுறித்து சுந்தர் பட்டர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் 2 முறை பெருமாள் 48 நாட்கள் தைலக் காப்பில் இருப்பார். அப்போது பக்தர்கள் அனைவரும், பெருமாளின் முகத்தினை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். இதில், ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் துவங்கி ஆவணி மாதம் பவித்ரோட்சம் முடிந்து 48 நாட்களில் பெருமாள் தைலக்காப்பில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்றார்….

The post 48 நாள் தைலக்காப்பு நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் திருவடி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Moolavar ,Tiruvadi Seva ,Srirangam Ranganathar Temple ,Tiruchi ,Tiruchi Srirangam Ranganatha Temple ,Bhuloka Vaikundam ,Tiruvadi ,
× RELATED பொற்றாளம் வழங்கிய தாளபுரீஸ்வரர்