×

ஹரீஷ் கல்யாணுக்கு இன்று திருமணம்

சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கசட தபற, தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே படங்களில் நடித்தவர் ஹரீஷ் கல்யாண். இப்போது டீசல், சசி இயக்கும் நூறு கோடி வானவில் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த நர்மதா உதயகுமாருக்கும் திருமணம் நிச்சயமானது. இதையடுத்து திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸில் இன்று காலை 9 மணிக்கு இவர்களது திருமணம் நடைபெறுகிறது. நாளை சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இது குறித்து ஹரீஷ் கல்யாண் கூறும்போது, ‘இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். காதல் திருமணம் கிடையாது. படப்பிடிப்புகள் இருப்பதால், திருமணம் முடிந்ததும் தேனிலவு செல்லவில்லை’என்றார்….

The post ஹரீஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் appeared first on Dinakaran.

Tags : Harish Kallyana ,Chennai ,Will Arrow ,Piar Prema Love ,King of Ispate ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!