×

பெண்களால் பெண்களே நெய்யும் புடவைகள்…சுசித்ரா உன்னியின் மாற்றங்கள்!

‘ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கணவர் என்னதான் சம்பாதித்தாலும், சுமுகமான மகிழ்ச்சியான வாழ்க்கிடைத்தாலும் அவர்களுக்கென ஒரு சிறுதொழில், சின்ன வருமானம் இருந்தே ஆகவேண்டும். இதன் மூலம் வருமானம் கிடைக்கிறதா இல்லையா இதெல்லாம் அடுத்தது. ஆனால் நம்மை நம் குழந்தைகள் இன்ஸ்பிரேஷனாகவும், எடுத்துக்காட்டாகவும் எடுத்துக்கொள்ளும்படி வாழ இதுதான் ஒரே வழி’ அழுத்தமாகவும் தன்னம்பிக்கை வார்த்தைகளாலும் ஆரம்பித்தார் சுசித்ரா உன்னி. ‘மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக என் பயணத்தை ஆரம்பித்தேன். பின்னர் தமிழில் இரண்டு படங்கள். பின்னர் துபாய் சென்று அங்கே சில காலம் வேலை செய்தேன். பிறகு திருமணமானதும் சென்னை வாழ்க்கை. சிறுவயதில் இருந்தே வேலை செய்து வருமானம் ஈட்டும் பெண்ணாகவே இருந்ததன் காரணம் பெண்கள் தொழில் முனைவு, வருமானம் ஈட்டுவதின் முக்கியத்துவம் நன்றாகவே புரிந்தவள் நான். அதனாலேயே மாற்றங்கள் என்னும் அமைப்பை உருவாக்கினேன். பொருளாதார அடிப்படையில் பெண்கள் வலிமையாக இருப்பது இப்போது இக்காலத்தில் மிக மிக அவசியம்’ என்னும் சுசித்ரா உன்னி பெண்களின் சுயதொழில் மற்றும் அதன் வளர்ச்சிக்காகவே மாற்றங்கள் என்னும் அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஊராக பயணித்துக் கொண்டிருக்கிறார்.‘எத்தனையோ பெண்கள் எவ்வளவோ சிறுதொழில்கள் செய்துவருகிறார்கள். எனினும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு சேர்க்கவோ, தேவையான மக்களிடம் விற்கவோ போதிய தளம் இல்லை. அதனால் உள்ளூரிலேயே இருக்கும் அக்கம் பக்கத்தார்களிடம் விற்பனை செய்வர். இன்னும் சிலர் கூலி போதும் என பெரிய கடைகள், ஆன்லைன் தளங்களில் என சொற்ப வருமானத்திற்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக இதில் கைத்தறித் தொழில் பெண்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தையும், மேலும் சொற்ப வருமானத்தையும் பெற்றுவருகிறார்கள். ஆனால் இவர்களிடம் புடவைகள் வாங்கும் கடைகளோ கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இப்படி சுயதொழில் செய்யும் பெண்களுக்கென தனி இணையதளம் எதுவும் கிடையாது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் எதுவானாலும் இனி நேரடியாக விற்கவும், அதன் மூலம் தக்க வருமானம் ஈட்டவும்தான் மாற்றங்கள், பிரத்யேக இணையதளம் கொண்டு வந்திருக்கிறது. இந்தத் தளத்தில் சுயதொழில் புரியும் பல பெண்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனைக்கு வைத்துள்ளனர். பெண்கள் சுயதொழில் முனைவோரின் பிரத்யேக தளம், மற்றும் ஆன்லைன் ஷாப்பிங். இந்தத் தளத்தில் ஒவ்வொரு பொருளும் அவர்களே நிர்ணயித்து நேரடியாக விற்கும் பொருட்கள். இதுதவிர சுயதொழில் துவங்க வேண்டும் என நினைக்கும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சிகள், தொழில் துவங்க கடன் உதவிகள் மற்றும் துவங்கிய பின் தொழில் முன்னேற்றம், விற்பனை என அனைத்திற்கும் ஓர் இடமாக மாற்றங்கள் மாற வேண்டும் என்பதே என் நோக்கம். மேலும் நேரடி சுயதொழில் பெண்களின் மார்கெட் நிகழ்ச்சிகளும் கூட செய்கிறோம்’ என்னும் சுசித்ரா உன்னி தன் குடும்பத்தினர் தனக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள் என்கிறார். ‘என் கணவரும் பெண்கள் முன்னேற்றம், அவர்களுடைய வளர்ச்சி இப்படி நிறையவே ஆர்வம் காட்டுவார். அதனுடைய முக்கியத்துவமும் உணர்ந்தவர். அதனாலேயே நான் இத்தனை ஊர்களுக்கு பயணித்தாலும், கூட்டங்கள் என சென்றாலும் அதற்கு போதுமான ஆதரவும், உதவிகளும் செய்துவருகிறார். சுயதொழில் துவங்க எண்ணும் பெண்கள் நேரடியாகவே மாற்றங்கள் இணையத்தில் இருக்கும் எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்’ என்னும் சுசித்ரா உன்னியின் மாற்றங்கள் அமைப்பு திருநங்கைகளையும் ஒன்று திரட்டி அவர்களுக்கும் சுயதொழில் துவங்க உதவி வருகிறது. இந்தத் தளத்தில் விற்கப்படும் அத்தனை பொருட்களும் சுயதொழில் செய்யும் பெண்களால் நேரடியாக விற்கப்படும் பொருட்கள். தொகுப்பு : ஷாலினி நியூட்டன்  தித்திப்பான டிப்ஸ்!*தேங்காய் பர்ஃபி செய்யப் போகிறீர்களா? முக்கால் பதம் வந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் அரை கப் விட்டுக் கிளறினால் மிருதுவாகவும் மைசூர்பாகு போன்ற அபார ருசியுடனும் இருக்கும்.*தேங்காய் பர்ஃபி தயாரிக்கும் போது சில சமயங்களில் பதம் தவறி முறுகிவிடலாம். அச்சமயம் அதைப் பாலில் ஊற வைத்து மீண்டும் கிளறி இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலைமாவைச் சிறிது தூவி இறக்கினால் தேங்காய் பர்ஃபி கெட்டியாகவும், சரியான பதத்திற்கும் வந்துவிடும்….

The post பெண்களால் பெண்களே நெய்யும் புடவைகள்…சுசித்ரா உன்னியின் மாற்றங்கள்! appeared first on Dinakaran.

Tags : sucitra uni ,Suchitra Yuni ,
× RELATED திமுக, அதிமுகவுக்குத்தான் போட்டி;...