×

பிரபல சினிமா இயக்குனர் மரணம்

மும்பை: பாலிவுட்டின் பழம்பெரும் இயக்குனர் ஷிவ் குமார் குரானா (83), கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள பிரம்மகுமாரி குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் ஷிவ் குமார் குரானாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலிவுட்டில் இன்றும் கொடிகட்டி பறக்கும் பல நடிகர்களை ஷிவ் குமார் குரானா தனது திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ‘ஹம் தும் அவுர் வோ’ என்ற படத்தை அவரே இயக்கி தயாரித்தார். இவரது மறைவு பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

The post பிரபல சினிமா இயக்குனர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bollyout ,Shiv Kumar Kurana ,Brahmmagumari ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு