×

நடிகையை கலாய்க்கும் நெட்டிஸன்கள்... அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு....

அட்டகாசம் செய்யும் பேயை அடக்கும் அம்மன் கதையான அருந்ததி படத்தில் அருந்ததி வேடம் ஏற்று அமர்க்களமான நடிப்பால் அசரவைத்தவர் அனுஷ்கா. அதன்பிறகு பாகுபலி, பாக்மதி படங்களில் மீண்டும் அசரவைத்தார். இந்நிலையில் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. அவர் நடித்த அருந்ததி படத்தின் 2ம் பாகத்தில் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய பட தரப்பு முடிவு செய்து பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்திடம் பேசி வருகின்றனர்.

இவர் தமிழில் ஏஞ்சல் படத்தில் நடிப்பதுடன் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் பாடல் காட்சியில் நடிக்கிறார். அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் பாயல் நடிக்கிறார் என்று தகவல்கள் பரவிவரும் நிலையில் அதற்கு அனுஷ்கா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனுஷ்கா நடித்த அருந்ததி பாத்திரத்தில் வேறு நடிகையை யோசித்துக்கூட பார்க்க முடிய வில்லை. பாயல் ராஜ்புத் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார். அருந்ததி 2ம் பாகம் எடுத்தால் அதில் அனுஷ்காவையே நடிக்க வைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்