×

உலக கோப்பை டி20 இந்தியா – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை

சிட்னி: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், இந்தியா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இத்தொடரில், இந்திய அணி 2வது பிரிவில் இடம் பெற்றுள்ளது. தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா, கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. இந்நிலையில் தனது 2வது ஆட்டத்தில் அனுபவம் குறைந்த நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. தகுதிச் சுற்றில் நெதர்லாந்து விளையாடிய 3 ஆட்டங்களில் 2ல் வென்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 12 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில்  வங்கதேசத்திடம் வீழ்ந்தது. ஆனாலும் வங்க தேசத்துக்கு வெற்றி எளிதாகக் கிடைத்து விடவில்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா கவனத்துடன் நெதர்லாந்தை எதிர்கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா கடுமையாகப் போராடிதான் வென்றது. கோஹ்லி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை கரை சேர்த்தார். ஹர்திக் பாண்டியாவும் பொறுப்புடன் விளையாடி கை கொடுத்தார். பந்துவீச்சிலும் அர்ஷ்தீப் உடன் பாண்டியாவின் பங்களிப்பும் பெரிதாக  இருந்தது. அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், இந்திய அணி எத்தகைய சவாலுக்கும் தயாராக உள்ளது. அதே சமயம், நெர்தலாந்து கடைசி வரை கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டம் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.* நேருக்கு நேர்…இந்தியா – நெதர்லாந்து அணிகள் 2 ஒரு நாள் ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த 2 ஆட்டங்களிலும் இந்தியாதான் வென்றுள்ளது. அதே நேரத்தில் டி20 ஆட்டங்களில் இந்த 2 அணிகளும் இன்றுதான் முதல்முறையாக மோத உள்ளன.* கடந்த 5 ஆட்டங்களில்…. நெதர்லாந்து தான் கடைசியாக விளையாடி 5 சர்வதேச டி20ல்  நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகளிடம் தோல்வியும், நமீபியா, ஐக்கிய அரபு அமீரக அணிகளை வீழ்த்தியும் உள்ளது. இவற்றில் கடைசி 4 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் நடப்பு உலக கோப்பையின் தகுதிச் சுற்றிலும், ஒரு ஆட்டம் சூப்பர் 12 சுற்றிலும் நடந்துள்ளன. இந்தியா தான் கடைசியாக விளையாடிய 5 டி20 ஆட்டங்களில், 4 ஆட்டங்களில் வென்றுள்ளது. அதில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒரு ஆட்டத்தில் ஆஸி.யையும் வீழ்த்தி உள்ளது. நடப்பு உலக கோப்பையின் சூப்பர் 12ல் பாகிஸ்தானை சாய்த்துள்ளது.* அணிகள்இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), யஜ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர்.அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் ஹூடா.நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), கோலின் ஆக்கர்மேன், டாம் கூப்பர், பாஸ் டி லீட், பிராண்டன் குளோவர், பிரெட் கிளாஸன், ஸ்டீபன் மைபர்க், தேஜா நிடமனரு, மேக்ஸ் ஓ தாவுத், டிம் பிரிங்கிள், ஷரிஸ் அகமது, லோகன் வான் பீக், டிம் வாண்டெர் மெர்வ், பால் வான் மீகரன், விக்ரம்ஜித் சிங்….

The post உலக கோப்பை டி20 இந்தியா – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : World Cup T20 ,India ,Netherlands ,Balaperit ,Sydney ,Super 12 round ,ICC World Cup T20 ,Balaperych ,Dinakaran ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...