×

நேபாள நாட்டவர் எனக்கூறி இமாச்சல் மடாலயத்தில் வசித்த சீன பெண் கைது: உளவாளியா என சந்தேகம்

மாண்டி: நேபாளத்தை சேர்ந்தவர் எனக் கூறி இமாச்சல் மடாலயத்தில் வசித்து வந்த சீன பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சீன உளவாளியா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. டெல்லியில் திபெத் அகதிகளுக்கான குடியிருப்பில் நேபாளத்தை சேர்ந்த புத்த மத துறவி எனக்கூறி போலி ஆவணங்களுடன் வசித்து வந்த சீன பெண்ணை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், இதே போல் இமாச்சல பிரதேச மாநிலத்திலும் சீன பெண் துறவி ஒருவர் சிக்கி உள்ளார்.இமாச்சலின் மாண்டி மாவட்டம், ஜோகிந்தர் நகரில் உள்ள மடாலயத்தில் வசித்து வந்த அந்த பெண் தன்னை நேபாளத்தை சேர்ந்தவர் எனக் கூறி உள்ளார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது ஆவணங்களை ஆய்வு செய்த போது அவை போலியானவை என தெரிந்தது. மேலும், அந்த பெண்ணிடம் எந்த நாட்டின் பாஸ்போர்ட்டும் இல்லை. இதன் காரணமாக வெளிநாட்டினர் சட்டப்பிரிவு 14 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இவர் சீன உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post நேபாள நாட்டவர் எனக்கூறி இமாச்சல் மடாலயத்தில் வசித்த சீன பெண் கைது: உளவாளியா என சந்தேகம் appeared first on Dinakaran.

Tags : Nepali ,Himachal monastery ,Mandi ,Nepal ,Himachal ,Dinakaran ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் போக்சோவில் கைது