×

மாநில எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி தமிழக பழங்குடியின பெண் விரட்டியடிப்பு: கேரளா வனத்துறை அதிகாரி வருத்தம் தெரிவித்தார்

சிவகிரி: கேரள எல்லை பகுதியில் நுழைந்ததாக கூறி சிறு வன மகசூல் சேகரித்த தமிழக பழங்குடியின பெண்ணை விரட்டியடித்த சம்பவத்துக்கு கேரள வனத்துறை அதிகாரி வருத்தம் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தலையணை பகுதியில் 43 பழங்குடியினர் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தேன் எடுத்தல், குங்குலியம், சுண்டைக்காய், கல்தாமரை மற்றும் சிறு வன மகசூல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இப்பகுதியை சேர்ந்த ஈசன் மனைவி சரசு மற்றும் ராஜா ஆகியோர் வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கேரளா மற்றும் தமிழக வன எல்லையில் கேரளா வனத்துறையினர் இப்பகுதியில் யாரும் வரக்கூடாது எனக்கூறி சரசுவின் தோளில் வைத்திருந்த வன மகசூலை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக புகார் கூறியிருந்தார்.இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் கேரளா மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தெரிவித்தார். இதையடுத்து கேரள வனத்துறையை சேர்ந்த பெரியார் கோட்ட வனசரகர் அகில் பாபு, கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், தலையணை பகுதியில் வசிக்கும் பளியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கடந்த 23ம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு வருத்தம் தெரிவித்தார். கேரளா வனத்துறையினர் 4 பேரை வரும் 2ம் தேதிக்குள் விசாரணை செய்வதாக உறுதியளித்தார். தமிழக எல்லையைத் தாண்டி கேரளா எல்லைக்குள் பாதை நோக்கத்திற்காக வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கேரள வனத்துறையினர் கையெழுத்திட்டு கொடுத்தனர்….

The post மாநில எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி தமிழக பழங்குடியின பெண் விரட்டியடிப்பு: கேரளா வனத்துறை அதிகாரி வருத்தம் தெரிவித்தார் appeared first on Dinakaran.

Tags : Kerala Forest Department ,Sivakiri ,Kerala border ,
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...