வெற்றியை பார்த்து பயம் - தனுஷ்

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ் கூறியதாவது: எனது படங்களின் வெற்றியும், பாடல்களின் உலகளாவிய வெற்றியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது இல்லை. இதெல்லாம் தானாக அமைந்தது. தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறேன். வெற்றியைப் பார்த்து பயப்படுகிறேன்.

காரணம், வெற்றி பெறும்போது பல விஷயங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே நடந்துவிடுகிறது. தோல்வி வரும்போது, இப்படி எல்லாம் நடந்துகொண்டோமே, இப்படி நடந்ததை கவனிக்காமல் விட்டுவிட்டோமே, எத்தனைபேரை அவமானப்படுத்தி இருக்கிறோம் என்பதை உணர்கிறேன். மற்றவர்களைப் போல் எனக்கும் பல பிரச்னைகள் இருக்கிறது.

10 ரூபாய் வைத்திருப்பவனுக்கு 12 ரூபாய்க்கு பிரச்னை. அதுபோல், என் வசதிக்கு  அதைவிட கூடுதலான பல பிரச்னைகள் காத்திருக்கிறது. இதையெல்லாம் எப்போதும் தவிர்க்க முடியாது. அதையெல்லாம் கடந்து செல்ல பழகிக்கொள்ள வேண்டும். அடுத்து எனது நடிப்பில் அசுரன் ரிலீசாகிறது. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், மாரி செல்வராஜ், செல்வராகவன் இயக்கத்திலும் நடிக்கிறேன்.

Tags : Dhanush ,
× RELATED சின்னமனூர் பகுதியில் அதிகரிக்கும்...