2ம் பாகத்தில் இன்ட்ரஸ்ட் இல்லை; சுசீந்திரன்

பாகுபலி, சிங்கம், காஞ்சனா போன்ற படங்கள் முதல் பாகம், இரண்டாம் பாகம் என வரிசையாக பல பாகங்களாக வெளியாகி வரவேற்பும் பெற்றுள்ளது. ஆனால் 2ம் பாகம் படங்கள் இயக்குவதில் இன்ட்ரஸ்ட் இல்லை என்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ‘2ம் பாகமாக ஒரு படத்தை இயக்கும்போது முதலில் இருந்த ஆர்வம் குறைந்துவிடும். எனவேதான் 2ம் பாகம் இயக்குவதில் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. வெண்ணிலா கபடி குழு 2ம் பாகத்தை நான் இயக்காவிட்டாலும் செல்வ சேகரன் இயக்குகிறார்.

இதன் கதையை நான் அமைத்திருக்கிறேன். ஏஞ்சலினா, கென்னடி கிளப், ஜீனியஸ், சேம்பியன் என 4 படங்களை தற்போது நான் இயக்குகிறேன். முதலில் ஏஞ்சலினா திரைக்கு வரும். சஸ்பென்ஸ் த்ரில்லரான இதில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அதை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறேன்.

சரண் சஞ்சய், கிரிஷா குரூப், சூரி, தேவதர்ஷினி நடிக்கின்றனர். டி. இமான் இசை. சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் நடித்த பின் எனக்கு நடிப்பு வாய்ப்பும் வருகிறது. எனது இலக்கு இயக்கத்தின் உச்சத்தை தொடுவதுதான். அதில்தான் கவனம் செலுத்துவேன். தவிர்க்க முடியாத வேடமாக வந்தால் மட்டுமே நடிப்பேன்’ என்றார். சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் தன்னை நடிகராக்கிய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவுக்கு தங்க செயின் அணிவித்தார் சுசீந்திரன்.

Tags : Suseenthran ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி