×

தலை கீழ் ஆன ரகுல்... நேர் ஆன உலகம்!

சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவிர நடிகர், நடிகைகள் என எல்லா தரப்பினரும் பங்கேற்றனர். யோகா செய்வதி லும் ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும் என்று எண்ணினார் ரகுல் ப்ரீத் சிங். வீட்டுக்குள் துப்பட்டாவை மேல்தளத்தில் உள்ள கம்பியில் கட்டி தொங்கவிட்டார். பிறகு அந்த துப்பாட்டாவில் தனது கால்களையும், இடுப்பையும் சுற்றிக்கொண்டு தலை கீழாக தொங்கியபடி யோகாசனம் செய்தார். அப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

‘அனுஷ்காவுடன் யோகா வகுப்பிற்கு செல்லும்வரை நான் ஒருபோதும் யோகா செய்தது கிடையாது. யோகா வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு கலை. நான் தலைகீழாக தொங்கியபோதுதான் எனது உலகம் நேராக இருந்தது. மனதுக்குள் அமைதி சந்தோஷம், நிதானம், காயங்களிலிருந்து மீட்சி என எல்லாம் எனக்கு கிடைத்தது. யோகாவிற்கு என்னை அடிமையாக்கியதற்காக அனுஷ்காவுக்கு நன்றி சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் ரகுல் ப்ரீத்.

Tags : Rakul ,world ,
× RELATED உலகின் விலையுயர்ந்த நாய்கள்