×

நிர்வாணமாக நடித்தாரா அமலாபால்... ஆடை இயக்குனர் ரத்னகுமார் விளக்கம்

மேயாத மான் படத்தை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம், ஆடை. இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஆடை இல்லாமல் அமலா பால் தோன்றுவது போல் ஒரு காட்சி இடம்பெற்று, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதுகுறித்து ரத்னகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

முன்கூட்டியே டெஸ்ட் ஷூட் செய்து, இந்தக் காட்சி இப்படித்தான் படமாக்கப்படும் என்று அமலா பாலிடம் தெரிவித்து, அதற்கு அவர் முழுமையான சம்மதம் கொடுத்த பிறகே படப்பிடிப்பு நடந்தது. அவர் தனக்கு பாதுகாப்பான ஆடைகள் அணிந்துதான் நடித்தார் என்பதால், அதுபற்றி யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஷூட்டிங் ஸ்பாட் சிறுசேரியில் உள்ள ஒரு பேக்டரி என்பதால், யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. யாரும் செல்போன் பயன்படுத்தவில்லை. கதையையும், தன் கேரக்டரையும் உணர்ந்து அமலா பால் நடித்துள்ளார். சென்சாரில் முதலில் பல காட்சிகளில் 18 ‘கட்’கள் கொடுத்தார்கள். பிறகு சில ‘கட்’களை குறைத்து, ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

Tags : Amala Paul ,Ratnakumar ,
× RELATED நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த...