×

எல்லை தாண்டிய குற்றங்களை திறன்பட கையாள மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கூட்டு முயற்சி தேவை: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

சண்டிகர்: 2024க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடைபெறும் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கூட்டுப் பொறுப்பாகும் என அமித்ஷா கூறினார்.ஹரியானா மாநிலத்தில் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமை தாங்கி, பேசி வருகிறார். இந்த 2 நாள் சிந்தனை முகாமில் பங்கேற்க அனைத்து  மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் அழைக்கபட்டுள்ளனர். மாநில உள்துறை செயலாளர்கள், காவல்துறை தலைமைஇயக்குனர்கள், ஒன்றிய ஆயுத காவல்படையில் தலைமை இயக்குனர்கள், ஒன்றிய காவல் அமைப்பின் சிந்தனை முகாமில் பங்கேற்றுள்ளனர். 2024-ல் தொலைநோக்கு பார்வை, பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர இந்தியா உறவில் 5 உறுதி மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அமல்படுத்துவது தொடர்பாக இந்த சிந்தனை முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி குற்றத்திற்கான நடைமுறை, காவல்படைகளை நவீனமாக்குதல், குற்றவியல் நீதித்துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகப்படுத்துதல் தரைவழி எல்லை நிர்வாகம், கடலோரபாதுகாப்பு, இதர உள்நாட்டு பாதுகாப்பு போன்றவைகள் இந்த முகாமில் விவாதிக்கப்பட உள்ளது. நாளைய தினம் பிரதமர் நரேந்திரமோடியும் காணொளி வாயிலாக இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் தற்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா: தேசிய புலனாய்வு அமைப்பை அவர்கள் அங்கீகாரத்தை மேலும் திறம்பட  செய்வதற்காக அனைத்து மாநிலங்களிலும் அதன் கிளைகள் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் 2024-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். நாடு முழுவதும் பார்க்கும் போது ஐதராபாத், குவஹடி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, கொச்சி, ராய்பூர், சண்டிகர், ராஞ்சி, ஜம்மு, சென்னை உள்ளிட்ட இடங்களில் மட்டுமே என்.ஐ.ஏ. கிளைகள் இயங்கி வருகிறது. இனி அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்கப்படும் என அமித்ஷா தெரிவித்தார். மேலும் எல்லை தாண்டிய குற்றங்களை திறன்பட கையாள மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கூட்டு முயற்சி தேவை என அவர் கூறினார். …

The post எல்லை தாண்டிய குற்றங்களை திறன்பட கையாள மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கூட்டு முயற்சி தேவை: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union government ,Home Minister ,Amitsha ,Chandikar ,NN ,GI PA ,Union ,Interior Minister ,Haryana ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...