×

தமிழில் மீண்டும் மோகன்பாபு

இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் சுதா கொங்கரா  இயக்கும் படம், சூரரைப் போற்று. சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பூ ராமு நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, நிக்கேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் தெலுங்கு  நடிகர் மோகன்பாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தனது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து அன்னை ஓர் ஆலயம், கமல்ஹாசனுடன் குரு உள்பட பல படங்களில் நடித்துள்ள மோகன்பாபு, பல வருட இடைவெளிக்குப் பிறகு சூரரைப் போற்று படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mohan Babab ,
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...