3டி தொழில்நுட்பத்தில் ஸ்பைடர்மேன்

2017ல் வெளிவந்த ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹோம். இந்த ஸ்பைடர் மேன் 3 டி படம் வரும் ஜூலை 5ம் தேதி தமிழிலும் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹோலேண்ட் இந்த படத்திலும் ஸ்பைடர் மேனாக நடித்துள்ளார்.

ஐரோப்பா நாடுகளை சுற்றிப் பார்க்க கிளம்பும் டாமுக்கு முக்கிய பொறுப்பும் வருகிறது. மனித குலத்துக்கு பெரும் ஆபத்துகளை விளைவிக்க தயாராகும் சில சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் டாமுக்கு ஏற்படுகிறது. முதல் பாகம் இயக்கிய ஜான் வாட்ஸ் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஜென்டயா ஹீரோயினாக நடித்துள்ளார்.

Related Stories:

>