×

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

விஜய் நடித்த வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன்ராஜா விரைவில் விஜய்யின் புதியபடம் இயக்குவேன் என்று சொல்லி வருடங்கள் உருண்டோடி விட்டது. இன்னும் விஜய் படத்தை இயக்குவதற்கான அறிகுறி தெரியவில்லை. இதுகுறித்து விஜய் ரசிகர்கள், மோகன்ராஜாவை சந்திக்கும் போது தளபதி விஜய் படத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.

இதுகுறித்து மோகன்ராஜா கூறும்போது,’விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்கு விஜய் தயாராக இருக்கிறார். அதுபற்றி என்னிடம் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்வார். நான் இயக்கிய தனி ஒருவன், வேலைக்காரன் படங்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.  

என்னுடைய வாழ்வில் முக்கியமான நபர் விஜய். அவரது நட்பு எனக்கு மிகவும் முக்கியம். ஆனால், தனி ஒருவன் 2ம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தை தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்துள்ளனர். அவர்களின் பொறுமைக்கு ஏற்ப நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.

Tags : Vijay ,fans ,
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...