எச்சில் ஊற வைத்த ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யாராய் தொடங்கி ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா லட்சுமி என பல ஐஸ்வர்யாக்கள் கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் வெவ்வேறு அடையாளங்களையும் இணைத்துக்கொண்டிருப்பதால் ஓரளவுக்கு யார் என்பதை கணிக்க முடிகிறது. இவர்களில் ஐஸ்வர்யா மேனன், காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, நேர் எதிர், ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ்படம் 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது கைவசம் படம் எதுவும் இல்லாத நிலையில் டிராவல் பேக்கை தோளில் தூக்கிபோட்டுக்கொண்டு சுற்றுலா கிளம்பிவிட்டார். வெளியூரில் தங்கியிருக்கும் ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார். ஓட்டல் ஒன்றில் அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிடும் காட்சியை பதிவிட்டிருக்கும் அவர்,’ காலை நேரம், ஸ்பூன் பயன்படுத்தாமல் கையிலேயே நூடுல்ஸ் சாப்பிடுகிறேன்.

தூக்கம் தூக்கமான முகத்துடன் இருக்கும் என்னை அப்படியே புகைப்படம் வேறு எடுத்துவிட்டார்கள்... என்ன செய்ய... அதையும் நீங்கள் பார்த்துதான் ஆக வேண்டும். நான் சாப்பிடும் நூடுல்ஸ் கரம்மசாலாவுடன் நாவில் எச்சில் ஊற வைத்தது. அம்புட்டும் அவ்ளோ ருசி...’ என குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

Tags : Aishwarya Menon ,
× RELATED இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்த 6வது முறையாக உமிழ்நீர் பரிசோதனை