மகள் வயது நடிகைக்கு லிப் டு லிப்

திரைப்படங்களில் இடம்பெறும் லிப் டு லிப் கிஸ் பற்றி சமீபத்தில் ஒரு நடிகை சொன்னதுபோல் சர்வ சாதாரண விஷயமாகி வருகிறது. இளவயது நடிகர், நடிகைகள்தான் இதற்கு ஓகே சொல்லி நடிக்கின்றனர் என்றால் 50 வயதை கடந்த ஹீரோக்களுக்கும் அந்த ஆசை இருக்கவே செய்கிறது. 59 வயது நடிகர் நாகார்ஜூனா. ரட்சகன், பயணம், தோழா போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

வயது ஏறினாலும் இன்னமும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். மன்மதடு 2 பாகம் என்ற தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வரும் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கெஸ்ட்ரோலில் அக்‌ஷரா கவுடா நடித்திருக்கிறார். இவர் தமிழிலும் துப்பாக்கி, உயர்திரு 420, ஆரம்பம், போகன், இரும்புகுதிரை, மாயவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மன்மதடு 2 பட டீஸர் வெளியானது. அதில் நாகார்ஜூனா, அக்‌ஷரா கவுடாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் சூடான காட்சி இடம்பெற்றது. அதைக் கண்டதும் இந்த வயதில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை. மகள் வயதுள்ள நடிகைக்கு லிப் டு லிப் கிஸ் தரலாமா? என்று பலரும் கேள்வி கேட்டு அவரை துளைத்தெடுத்திருக்கின்றனர்.

Tags : Daughter Actress ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி