அப்பாவுடன் ரோடு வேலைக்கு போன இயக்குனர்

பெற்றோர். ஆசிரியர் கண்டிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் எதிர்காலம் எவ்வாறு சிதையும் என்பதை மையமாக வைத்து ‘பிழை’ படம் உருவாகியிருக்கிறது. ராஜவேல் கிருஷ்ணா இயக்க, ஆர்.தாமோதரன் தயாரித்திருக்கிறார். சின்ன ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நசாத், கோகுல், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ், இளன் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது,’இது அப்பாக்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தை மையமாக கொண்ட கதை.

பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் அப்பா உயிரையும் கொடுப்பார். இப்படத்தில் வரும் சம்பவங்களை பலரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்திருப்பார்கள். என் அப்பா முறுக்கு மீசையுடன் முரட்டுத்தனமாக இருப்பார். அவரை பார்த்தாலே நான் உச்சாபோய்விடுவேன். அப்படிப்பட்டவர் என் அண்ணன் வீட்டைவிட்டு ஓடியதை எண்ணி கண்கலங்குவார். பள்ளியில் எனக்கு விடுமுறை கிடைத்தால் என் அப்பாவுடன் நான் ரோடு வேலை செய்யச் செல்வேன்.

அவரது கண்டிப்பான வளர்ப்பும் பள்ளியில் ஆசிரியர்கள் காட்டிய அக்கறையுடன் கூடிய கண்டிப்பும்தான் என்னை இன்று இந்தநிலைக்கு உயர்த்தியிருக்கிறது’ என்றார். ‘இன்றைக்கு மாணவனை கண்டித்தால் ஆசிரியருக்கு சிறை தண்டனை, மகனை கண்டித்தால் பெற்றோருக்கு தண்டனை என்று சட்டம் வந்திருக்கிறது. கண்டித்து வளர்க்காத பிள்ளைகள் எப்படி ஊதாரிகளாகியிருக்கிறார்கள் என்பதை காணமுடிகிறது. அதற்கெல்லாம் பதில் தரும் படமாக பிழை இருக்கும்’ என்றார் தயாரிப்பாளர் டி.தாமோதரன்.

Tags : dad ,
× RELATED சர்ச்சை இயக்குனரை டீஸ் செய்த டைரக்டர்