×

கீர்த்தி மீது கவர்ச்சி நடிகை அட்டாக்

நடிகையர் திலகம் (மகாநதி) படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பில் தேர்ந்தவர் என்ற பெயர் கிடைத்தது. ஆனால் கீர்த்தி மீது என்ன கோபமோ தெரியவில்லை அவரை கடுமையாக நக்கலடித்து விமர்சித்திருக்கிறார் ஒரு கவர்ச்சி நடிகை. பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மீது சரமாரியாக பாலியல் புகார் கூறியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில்,’கீர்த்தி சுரேஷும் நானும் ஒரே விமானத்தில பயணம் செய்தோம். கீர்த்தியை யாருமே கண்டுகொள்ளவில்லை.

அவர் உடல் மெலிந்து அடையாளமே தெரியாமல் ஒரு நோயாளிபோல் இருந்தார். விமானத்தில் வந்தவர்கள் என்னுடன்தான் செல்பி எடுத்துக் கொண்டனர். அவரிடம் யாரும் செல்பி எடுக்கவில்லை. நடிகயைர் திலகம் படத்தில் கீர்த்தி நடிப்புபற்றி புகழ்ந்தார்கள். அந்த படத்தின் இயக்குனர் பவர்புல்லாக கற்றுதந்ததால்தான் கீர்த்தியால் நடிக்க முடிந்தது. இது கீர்த்தியின் திறமை கிடையாது. தற்போதைக்கு சாய் பல்லவிதான் சிறந்த நடிகையாக இருக்கிறார்’ என கீர்த்தியை போட்டுத் தாக்கியிருக்கிறார்.

Tags : Keerthi ,actress ,Attock ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...