மகள் சம்மதத்துடன் நடிகர் மறுமணம்

சினிமாவில் மின்னும் நட்சத்திரங்களில் சிலரது நிஜவாழ்வு அவ்வளவு மினுமினுப்புடன் இருப்பதில்லை. வில்லன், குணசித்ர நடிகரான பிரகாஷ்ராஜ் இயக்குனர் கே.பாலசந்தரால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமரியை மணந்த இவர் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை 2வதாக திருமணம் செய்தார். லலிதாகுமரியுடன் பிரகாஷ் ராஜுக்கு 3 குழந்தைகளும், போனி வர்மாவுடன் ஒரு குழந்தையும் என 4 குழந்தைகள்.
 
2வது திருமணம் செய்ததுபற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு பிரகாஷ்ராஜ் தற்போது மனம் திறந்திருக்கிறார். அவர் கூறும்போது,’லலிதாவுக்கும் எனக்கும் பிரச்னை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்பதால் வெளிப்படையாக பேசி பிரிந்தோம். நான்தான் அவரை விவாகரத்து செய்தேன். என் குழந்தைகளும் என் அம்மாவும் அவரை விவாகரத்து செய்யவில்லை.

போனி வர்மாவை மறுமணம் செய்வதற்கு முன் அவரை என் வீட்டிற்கு அழைத்து வந்து என் பிள்ளைகள், என் அம்மா முன் நிறுத்தி அவர்களின் சம்மதம் கேட்டேன். அப்போது எனது மூத்த மகளுக்கு 14 வயது. அவர் சம்மதம் தெரிவித்தார். என் அம்மா அழுதுவிட்டார். இப்போது என் முதல் மனைவி லலிதாவும் 2வது மனைவி போனியும் குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகிவிட்டனர்’ என்றார்.

Tags : Actor ,
× RELATED கடலில் விழப்போன காமெடி நடிகரை காப்பாற்றிய நடிகை