×

பெருகும் பெண் இயக்குனர்கள்

ஸ்ரீபிரியா, ரேவதி, ரோகிணி, சுதா கங்கரா என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் இயக்குனர்கள் இருந்த நிலையில் தற்போது அவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் விரைவில் நடிகைகள் பூ பார்வதி, அனுபாமா பரமேஸ்வரன், நித்யாமேனன் இயக்குனர்கள் ஆக உள்ளனர்.  இந்நிலையில் பெண் இயக்குனர் குட்டி ரேவதி, ‘சிறகு’ என்ற பெயரில் புதிய படம் இயக்கியிருக்கிறார். மாலா மணியன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல், டீஸரை மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டனர்.

இதுபற்றி குறிப்பிட்ட இயக்குனர் குட்டி ராதிகா,’ஹரி கிருஷ்ணன் கதை நாயகனாகவும், அக்‌ஷிதா நாயகியாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 30 நாட்கள் நடந்தது. படத்தின் இரண்டு சிறகுகள் இசை அமைப்பாளர் அரோல் கரோலி, ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி. சரியாக திட்டமிட்டு இப்படத்தை தயாரித்திருக்கிறார் மாலா மணியன். சென்னையில் தொடங்கி கன்னியாகுமரிவரை இதன் படப்பிடிப்பை குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து முடித்திருக்கிறோம். இப்படம் ஒரு மகிழ்வான நினைவாக இருக்கும்’ என்றார்.

Tags : directors ,
× RELATED ஆருத்ரா கோல்டு டிரேடிங் வழக்கில்...