விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

போ ஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ், இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. திரைக்கதை எழுதி விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவும் செய்கிறார்.

தற்போது, ​​இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள், ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் முதல் இந்திய கடற்கரைகளின் தலைநகரமான’ கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

× RELATED உபரி ஆசிரியர் பணிநிரவல்...