×

தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: ஒரேநாளில் 211.8 டன் குப்பை சேர்ந்தது

சென்னை: தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், அதிக அளவில் பட்டாசு வெடித்ததால் சென்னையே கரும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது. நேற்று ஒரு நாளில் 211.8 டன் குப்பை சேர்ந்துள்ளது. 180 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி தமிழகத்திலும் களைகட்டியது. மக்கள் புத்தாடை அணிந்து இனிப்பு பலகாரங்களை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர். இதனால், சென்னை உள்பட முக்கிய நகரங்கள் நேற்று முன்தினம். வண்ண வண்ண வாண வேடிக்கைகளால் மிளிர்ந்தன.காற்று மாசு காரணமாக தமிழகத்தில் பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், பொதுமக்கள் உற்சாகம் மிகுதியால் பட்டாசுகளை வாங்கி குவித்தனர். அதை நேற்று முன்தினம் முழுவதுமே வெடித்து தள்ளினர். மாலையில் இருந்து குடும்பம் குடும்பமாக  வீடுகள் முன்பு வெடித்தனர். இரவு 10 மணி, 11 மணி வரையிலும் குழந்தைகளை  அருகில் வைத்து பெற்றோர் பட்டாசு வெடித்து குதூகலமாக தீபாவளியை கொண்டாடி  மகிழ்ந்தனர்.இதனால், சென்னை உள்ளிட்ட பல நகரங்கள் கரும் புகை மூட்டமாக காட்சி அளித்தன. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பனி படர்ந்தது போல சென்னை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலையில் இருந்து இரவு வரை வெடி வெடிக்கப்பட்டதால் புகை மண்டலம் ஏற்பட்டு காற்று மாசு மோசமான நிலையை அடைந்தது. நேற்று முன்தினம் காலை காற்றின் நுண் துகள் அளவு 109 ஆக இருந்த நிலையில் மாலையில் 192 ஆக உயர்ந்தது. ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்று மாசு அளவாகும்.ஆனால், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தை அதிகரித்தது. இதனால் சென்னையில் நேற்று முன்தினம் பல இடங்களில் காற்று மாசு அளவு தரக்குறியீடு எண் 200ஐ தொட்டது. அதாவது, பெருங்குடியில் 235, ராயபுரம் 210, மணலி 265,  வேளச்சேரி 204 என்ற அளவில் உயர்ந்தது. நேற்று முன்தினம் சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன. இந்த தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள். தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர். சென்னையில் தீபாவளி பட்டாசு குப்பை 23ம்தேதி இரவு முதல் குவியத் தொடங்கின. 3 நாட்களில் பட்டாசு வெடித்ததின் மூலம் 211.8 டன் குப்பை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தேங்கியது. அதனை உடனடியாக அள்ளும் பணியில் 20 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் மூலம் நடந்து வருகிறது. வழக்கமாக, எடுக்கப்படுகிற 5,300 மெட்ரிக் டன் குப்பையோடு தீபாவளி குப்பை 211.8 டன் கூடுதலாக சேகரிக்கப்பட்டுள்ளது. கடை வீதிகளில் தீபாவளி விற்பனை கழிவுகள் உள்ளிட்ட  குப்பை சென்னையில் பல்வேறு இடங்களில் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன.ஒலி மாசு அளவீடு கண்காணிப்பு மையங்கள்    தீபாவளி (2021)    தீபாவளி (2022)பெசன்ட் நகர்    73டிபி(ஏ)    66டிபி(ஏ)தி.நகர்    79டிபி(ஏ)    77.7டிபி(ஏ)நுங்கம்பாக்கம்    74டிபி(ஏ)    78.6டிபி(ஏ)திருவல்லிக்கேணி    69டிபி(ஏ)    73.3டிபி(ஏ)சவுகார்பேட்டை    72டிபி(ஏ)    71.7டிபி(ஏ)வளசரவாக்கம்    —    77டிபி(ஏ)திருவொற்றியூர்    —    79.7டிபி(ஏ)…

The post தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: ஒரேநாளில் 211.8 டன் குப்பை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...