×

கிளாப்பில் அகான்ஷா சிங்

ஆதி நடிக்கும் படத்துக்கு, கிளாப் - தி சவுண்ட் ஆஃப் சக்சஸ் என்று  பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும்  இதை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன், கட்ஸ் அன்ட்  க்ளோரி  ஸ்டுடியோஸ் சார்பில்  ஜி.மனோஜ், ஜி.ஸ்ரீஹர்ஷா, பி.எம்.எம் பிலிம்ஸ் சார்பில்  பி.பிரபா பிரேம் இணைந்து  தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிரவீன் குமார்.

இசை, இளையராஜா. இயக்கம், பிரித்வி ஆதித்யா. அவர் கூறுகையில், ‘தடகள வீரராக ஆதி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், அகான்ஷா சிங், கிரிஷா குரூப்,  நாசர், மைம் கோபி, முனீஸ்காந்த் நடிக்கின்றனர். விளையாட்டில் நடக்கும்  முக்கிய பிரச்னைகள் குறித்து படம் அலசுகிறது’ என்றார்.

Tags : Akshana Singh ,cliff ,
× RELATED குன்றக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் சஸ்பெண்ட்