தனுஷ் ஜோடியாகும் மெஹ்ரின்

எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களுக்கு பிறகு  ஆர்.எஸ்.துரை  செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக  நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சினேகா, நவீன் சந்திரா நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்வின் இசை  அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்  கடந்த மார்ச் மாதம்  குற்றாலத்தில்  தொடங்கியது.

இந்நிலையில், இன்னொரு ஹீரோயினாக மெஹ்ரின் பிர்சாடா ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நோட்டா படத்தில்  நடித்தவர். அதற்கு முன், சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்திருந்தார் என்றாலும், அவரது காட்சிகள் படத்தில் இருந்து  முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது.

Tags : Dhanush ,
× RELATED தனுஷ் காட்டிய வெள்ளை கொடி