×

தேவரின் 115வது ஆண்டு ஜெயந்தி விழா: பசும்பொன் செல்வதை தவிர்த்தார் எடப்பாடி.. சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடிவு..!!

சென்னை: தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னில் குருபூஜையில் பங்கேற்காமல் சென்னையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். தேவர் திருமகனாரின் 115வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, நந்தனம், – அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார்  திருஉருவச் சிலைக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது….

The post தேவரின் 115வது ஆண்டு ஜெயந்தி விழா: பசும்பொன் செல்வதை தவிர்த்தார் எடப்பாடி.. சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : 115th Jayanti ,Edappadi ,Pasumpon ,Chennai ,Devar Jayanti ,Edappadi Palaniswami ,Devar ,Gurupuja ,115th Jayanti Festival ,Nandanam, Chennai ,
× RELATED காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி கோரிக்கை