அனுபாமா காதல் விவகாரம்; லைக் செஞ்சா என்ன தப்பு?

அனுபாமா பரமேஸ்வரன் ரசிகர்களுக்கு பரிட்சயமான பெயர் என்றாலும் தமிழில் ‘கொடி’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அப்படத்தில் தனுஷுடன் அவர் பேசிய ‘பாப்பாவா?’ என்று மலையாள தமிழில்  பேசிய வசனம் அவரை ரசிகர்கள் மனதில் நிறுத்தியிருப்பதுடன் அவரும் தொடர்ந்து டுவிட்டர் பக்கம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். டோலிவுட், மல்லுவுட் படங்களிலும் நடிப்பு கைகொடுக்காததால் இயக்குனர் ஆகும் எண்ணத்துடன் டைரக்டர் ஒருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் பும்ராவும், அனுபாமாவும் டுவிட்டர் ஃபிரண்ட்ஸ். கிரிக்கெட் வீரர்கள் பலரை ஃபாலோ செய்யும் பும்ரா, நடிகைகளில் அனுபாமாவை மட்டும் ஃபாலோ செய்கிறார். அவரது பதிவுகளுக்கு உடனே லைக் கொடுக்கிறார். அதேபோல் அனுபாமா ஃபாலோ செய்யும் நபர்களில் ஒரே கிரிக்கெட் வீரர் பும்ரா ஆவார். இருவருக்கும் காதல் என்று கடந்த சில வாரங்களாக கிசுகிசு பரவி வரும் நிலையில் அதுபற்றி அனுபாமா பதில் அளித்தார். அவர் கூறும்போது,’நாங்கள் (பும்ரா, அனுபாமா) காதலிக்கவில்லை. ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் அவ்ளோதான். ஒரு ஃபிரண்டோட டுவிட்டர் மெசேஜை லைக் செஞ்சா என்ன தப்பு? என்றார்.

Tags : love affair ,
× RELATED ஒருதலை காதல் பிரச்னையில் கல்லூரி...