மென் இன் பிளாக்: இன்டெர்நேஷனல்

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் கேரி கேரி இயக்கத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மற்றும் டெஸ்ஸா தாம்சன், லியாம் நீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மென் இன் பிளாக்: இன்டெர்நேஷனல். மோல்லி ரைட்(டெஸ்ஸா தாம்சன்) என்னும் சிறுமி சிறுவயதில் வீட்டுக்கு வரும் ஏலியனுக்கு உதவுகிறாள், அவளது அம்மா , அப்பா இருவரும் ஏலியனைப் பார்த்துவிட எம்.ஐ.பி ஏஜென்ட்களால் அவர்களின் ஏலியன் பார்த்த நினைவுகள் மட்டும் அழிக்கப்படுகின்றன.

ஆனால் சிறுமி மோல்லி தூங்குகிறாள் என நினைத்து ஏஜென்ட்கள் அவளை விட்டு விட அந்த நினைவுகளுடன் எப்படியேனும் அமெரிக்க கிரைம் டிபார்ட்மென்ட், அல்லது போலீஸ் என சேர நினைக்கிறாள். ஆனால் அவளது ஏலியனைப் பார்த்த நினைவால் ரிஜெக்ட் ஆகிறாள். இதற்கிடையில் எம்.ஐ.பி குழுவை எப்படியேனும் சந்திக்க விரும்பி அவர்களையும் கண்டு பிடிக்கிறாள். மூத்த ஏஜென் ட் ‘ஓ‘ விடம் நற்பெயற் வாங்கி எம்.ஐ.பி ஏஜென்ட் எம் ஆக வேலையும் கிடைக்கிறது.

வழக்கம் போல உலகை அழிக்க நினைக்கும் ஏலியன், அதற்கு கிடைத்து விடக்கூடாது என்கிற பாணியிலான ஒரு டிவைஸ் இதை முறியடிக்கும் பொறுப்புடன் எம்.ஐ. பி குழு ஏஜென்ட் ஹெச்-ஐ(கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) நியமிக்கிறது. உடன் சேர்ந்து வேலை செய்ய மோல்லிக்கும் வாய்ப்பு அமைய இருவரும் நடக்கப்போகும் அசம்பாவிதத்தை தடுத்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேமில் தொப்பையும், பீருமாக காட்சியளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தப் படத்தில் ஸ்டைலிஷ், ஹேண்ட்சம் லுக்கில் சிலிர்க்க வைக்கிறார்.

ஆனால் படம் நெடுக அவருக்கான முக்கியத்துவம் பெரிதாக இல்லை. ஹீரோயின் டெஸ்ஸா அவருக்கான பாத்திரத்தில் நின்று விளையாடுகிறார். தொட்டவுடன் சிதறி ஓடும் ஏலியன், தாடி போல் அமர்ந்திருக்கும் குட்டி ஏலியன் என பட முழுக்க 3டி விருந்து. மேலும் பாணியாக வரும் குட்டி ஏலியன் ஆங்கங்கே ஆறுதல்.  எனினும் முந்தைய பாகங்களைக் காட்டிலும் இந்தப் படம் சற்றே ஏமாற்றம் தான்.ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பதில் ரன்னிங் சேஸிங் என படம் அப்படியே தொங்கி நிற்கிறது. ஒளிப்பதிவும், பின்னணியும் அருமை. எம்.ஐ.பி ரசிகர்களுக்கு இதுவும் ஒரு பாகமாக வரிசையில் சேரும். மற்றபடி படம் பெரிதாக ஈர்க்கவில்லை.

Tags :
× RELATED கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்