×

ஜூவலா கட்டாவை திருமணம் செய்யும் விஷ்ணு விஷால்?

நடிகர் விஷ்ணு விஷால் தனது பெண் தோழியான ஜூவலா கட்டாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் இவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறிர்களா? என்று கேள்வி எழுப்பினர். விஷ்ணு விஷால் 2011ல் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து அமலாபாலை திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கு விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் தனது பெண் தோழியான ஜூவலா கட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை விஷ்ணு விஷால் வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் இவர் தான் அடுத்த தோழியா? இவரை தான் திருமணம் செய்ய போகிறிர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags : Vishnu Vishal ,
× RELATED யானைப்பாகனாக விஷ்ணு விஷால்