ரியல் எஸ்டேட்டில் டாப்ஸி

தமிழ், தெலுங்கிலிருந்து இந்திக்கு போனார் டாப்ஸி. இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் அவர் நுழைந்திருக்கிறார். ஏற்கனவே திருமண அலங்கார ஏற்பாடுகளை செய்து தரும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சில இயக்குனர்களின் அறிவுரை கேட்டு மும்பையில் ரியஸ் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அபார்ட்மென்ட்டில் சொந்த வீட்டில் அவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ரூ.6 கோடியில் மற்றொரு வீட்டை வாங்கியுள்ளார். மேலும் சில பிளாட்களையும் வாங்கியிருக்கிறாராம். நல்ல விலை வரும்போது இவற்றை விற்க அவர் முயற்சிப்பாராம். இதற்கிடையே தமிழ், தெலுங்கில் கேம் ஓவர் என்ற ஹாரர் கதை படத்தில் டாப்ஸி நடித்துள்ளார். இந்தியில் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களிலும் அவர் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

× RELATED அரக்கோணம் அருகே துணிகரம் 7.62 லட்சம்...