×

அதிக சம்பளம் கேட்கிறேனா? ஜி.வி.பிரகாஷ் குமார்

ஏ.எல்.விஜய்  இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா பயோபிக், வெற்றிமாறன்  இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன்,  சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா  நடிக்கும் சூரரைப்போற்று ஆகிய படங்களுக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ்  குமார் கூறியதாவது: சினிமாவுக்கு வந்து 13 வருடங்களாகி விட்டது. 72  படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். நான் நடிக்கும் படங்களுக்கும், மற்ற  படங்களுக்கும் இசை அமைத்து வருகிறேன். நான் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில், ஐங்கரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகிறது.

இசை அமைக்கவும்,  நடிக்கவும் அதிக சம்பளம் கேட்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. என்  உயரம் என்னவென்று தெரியும். நடிப்பதும், இசை அமைப்பதும் பணத்துக்காக  மட்டுமல்ல. எனக்கு பெரிய பணத்தேவையும் கிடையாது. மக்கள் விரும்பும்  இசையையும், நல்ல படங்களையும் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இப்போது மக்களுக்காக பணியாற்றும் சாதனையாளர்களை பேட்டி எடுத்து, ‘மகத்தான மனிதர்கள்’ என்ற  பெயரில் யுடியூப்பில் வெளியிட்டு வருகிறேன்.

Tags : GV Prakash Kumar ,
× RELATED ஐஸ்வர்யா சிபாரிசு செய்ததால் நடிக்க பயந்தேன்: ஜி.வி.பிரகாஷ்