முதன் முறையாக போலீசாக நடிக்கும் சசிகுமார்

நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சசிகுமார் நடிக்கிறார். இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதாகிருஷ்ணன் நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

More