சாஹூவிலிருந்து விலகிய இசையமைப்பாளர்கள்

பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹு. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் ஆக்‌ஷன் படமிது. ஸ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப், அருண் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இசையமைக்க பாலிவுட் இசையமைப்பாளர்களான ஷங்கர் எஹசான் லாய் ஆகியோர் தேர்வாகினர். ஆகஸ்ட் 15ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் படத்திலிருந்து ஷங்கர் எஹசான் லாய் திடீரென விலகியுள்ளனர். இதை தங்களது டிவிட்டரில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். படத்திலிருந்து இவர்கள் விலகியதற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பார் என தகவல் பரவியுள்ளது.

Related Stories:

>