×

சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜை: சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலையில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருநாள் மன்னரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை முதலே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.இன்று ஒரு நாள் மட்டுமே கோயில் நடை திறந்திருக்கும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்படும். மறுநாள் (17 ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. 41 நாள் நீளும் மண்டல காலம் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. 2 வருடங்களுக்குப் பிறகு எந்தவித கொரோனா கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்த வருடம் மண்டல கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால் சபரிமலையில் முந்தைய வருடங்களைப் போல மண்டல காலத்தில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜை: சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Shitri ,Sabarimalai ,Thiruvananthapuram ,Sabarimalaya ,Shitri Tirava Balarama Varma ,King ,Thiruvidangur ,Samasthanam ,
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு