×

அதா சர்மாவின் அலம்பல்

சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அதா சர்மா. சார்லி சாப்ளின்-2’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடிக்கிறார். 5 அடி 7 அங்குளம் என கிட்டதட்ட 6 அடி உயரம் கொண்டவராக இருந்தாலும் தனது உடற்கட்டை படுகவர்ச்சியாக பராமரித்து வருகிறார்.

அடிக்கடி இணைய தளத்தில் கவர்ச்சி படங்களாக வெளியிட்டு தனது இளமையை ரசிகர்களுக்கு விருந்தாக்கி அலம்பல் செய்து வருகிறார். வார இதழ் ஒன்றுக்காக மாறுபட்ட போட்டோசூட் நடத்தியிருக்கும் அதா,  அதை வீடியோவாகவும் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒற்றை கையில் தலைகீழாக நிற்கும் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர்.

Tags : Ada Sharma ,
× RELATED கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு!: அகரத்தில் 5...