ஈரமான ரோஜாவே... சூடேற்றும் தமன்னா

ரோஜாப்பு நிறத்தில் பளபளக்கும் தமன்னாவுக்கு அவரது கலர் பிளஸ் பாயின்ட்டாக இருக்கிறது. ஏற்கனவே பளீரென்று இருக்கும் தமன்னாவுக்கு மேக்அப்பும் அதிகம் தேவைப்படுவதில்லை. திறமையும் அழகும் ஒருங்கே அமைந்திருந்தாலும் அதிர்ஷ்டம் வருவதும் போவதுமாக இருக்கிறது. அவர் நடிக்கும் 2 படம் ஹிட்டானால் ஒரு படம் காலை வாரிவிடுகிறது. அதுபற்றி கவலைப்படாமல் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறார் தமன்னா.

மூடி மறைத்துக்கொண்டிருந்த அழகை தற்போது வெளிச்சம்போட்டு காட்டத் தொடங்கியிருக்கிறார். விஷாலுடன் கத்தி சண்டை படத்தில் ஜோடி போட்ட போது தூக்கலான ஸ்கர்ட் அணிந்து வாழைத்தண்டு தொடை அழகில் கிரங்கடித்த தமன்னா தற்போது தேவி 2ம் பாகத்தில், கச்சையுடன் நீரில் மூழ்கி எழும் ஈரமான ரோஜாவாக பாடல் காட்சியில் நடித்து சூட்டை கிளப்பியிருக்கிறார்.

Tags :
× RELATED ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்