×

படப்பிடிப்புக்கு சில நிமிட காட்சிக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ஹவுஸ் ஓனர். இதில் நடித்துள்ள ஆடுகளம் கிஷோர் கூறியதாவது: இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையின் ஒரு பகுதியை மூழ்கடித்த பெருவெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் உணர்வுப்பூர்வமான காதல் கதை இது. பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளோம்.

இப்படத்துக்காக சென்னையிலுள்ள விஜி சந்திரசேகரின் பண்ணை நிலத்தில், 12 லட்சம் லிட்டர் தண்ணீருக்குள் ஒரு வீடு கட்டி, அதில் நாங்கள் அனைவரும் மூழ்கியபடி நடித்த சில நிமிட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்ற காட்சிகள் எந்த படத்திலும் இடம்பெற்றது இல்லை.

பண்ணை நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்தும், பக்கத்து நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்தும் மோட்டார் மூலம் நீர் இறைத்து, தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பி படப்பிடிப்பு நடத்தினோம். உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்தது. தண்ணீரை வீணாக்காமல், குழாய்கள் மூலம் மீண்டும் கிணற்றுக்கே தண்ணீரை திருப்பி அனுப்பினார்கள்.

Tags :
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்